பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

அந்துவன் பொறையன்=
(பொறையன் பெருந்தேவி)

செல்வக் கடுங்கோ வாழியாதன்=
(வேளாவிக் கோமான் பதுமன் தேவி)
┌───────┴───────┐
பெருஞ்சேரல் இரும்பொறைகுட்டுவன் இரும்பொறை=
(தகடூரை எறிந்தவன்)(அந்துவஞ்செள்ளை)

யானைக்கட் சேய் மாந்தரஞ்இளஞ்சேரல் இரும்பொறை
 சேரல் இரும்பொறை

செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு, இரண்டு ஆண் மக்கள் (துணைப் புதல்வர்) இருந்தார்கள் என்று 7-ஆம் பத்துத் தெளிவாகக் கூறுகின்றது. இதைச் சரித்திர அறிஞர்கள் கவனிக்கவில்லை. செல்வக் கடுங்கோவுக்கு அந்துவஞ் செள்ளை என்னும் ஒரு சகோதரி இருந்தாள் என்று நீலகண்ட சாஸ்திரி ஊகமாக எழுதியுள்ளார். இதற்குச் சான்று ஒன்றும் இவர் காட்டவில்லை. இவ்வாறு கற்பனையாகக் கற்பிக்கிற இவர், அந்துவஞ் செள்ளையை, யாரோ ஒரு குட்டுவன் இரும்பொறை என்னும் சேர அரசன் மணஞ் செய்து கொண்டான் என்று மேலும் கற்பனை செய்கிறார். குட்டுவன் இரும்பொறை, செல்வக் கடுங்கோவின் இளைய மகன் என்பதற்கு மேலே சான்று காட்டியுள்ளோம். இந்த அகச் சான்றையறியாமல், இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்ட நீலகண்ட சாஸ்திரி, அந்துவஞ் செள்ளை, மையூர் கிழானின் மகள் என்று (9-ஆம் பத்து பதிகம்) கூறுகிறபடியால், தான் தவறாக யூகித்துக் கொண்ட தவற்றைச் சரிப்படுத்துவதற்காக, மையூர் கிழான் என்பது அந்துவன் பொறையனுடைய இன்னொரு பெயர் என்று இன்னொரு தவற்றைச் செய்துள்ளார். இதுவும், இவருடைய கற்பனையே. பொறையனாகிய சேர அரசன் எப்படி கிழானாக