பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


இளஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய முன்னோர்களைப் போலவே கொங்கு நாடு முழுவதும் அரசாண்டான். பூழியர்கோ கொங்கர்கோ, தொண்டியர் பொருநன், குட்டுவர் ஏறு, பூழியர் மெய்ம்மறை, மாந்தையோர் பொருநன், கட்டூர் வேந்து என்றும், கொங்கு நாட்டில் பாயும் 'வானி நீரினும் தீந்தண் சாயலன்' என்றும் கூறப்படுகிறான். 9-ஆம் பத்தில் இவன் பலமுறை பல்வேற் குட்டுவன்' 'வென்வேற் பொறையன்' 'பல்வேல் இரும்பொறை' என்று கூறப்படுகிறான்' 9-ஆம் பத்தின் பதிகத்தில் இவன் 'விச்சியின் ஐந்தெயிலை' எறிந்தான் என்றும் அப்போரில் சோழ பாண்டியர் தோற்றனர் என்றும் கூறப்படுகிறான். மற்றும் 'பொந்த்தியாண்ட பெருஞ் சோழனையும் வித்தையாண்ட இளம் பழையன் மாறனையும்' வென்றான் என்று கூறப்படுகிறான்.