பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

வந்து தன்னுடைய வஞ்சிக் கருவூரில் அமைத்து விழா செய்தான் என்றும் அறிகிறோம்.[1] காவிரிப்பூம் பட்டினத்துச் சதுக்கப் பூதரை எடுத்துக் கொண்டு வந்து இவன் வஞ்சி நகரத்தில் வைத்து விழாக் கொண்டாடினதைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது.[2]

இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டனாக இருந்தவன் மையூர் கிழான். மையூர்கிழான் இவனுடைய தாய்ப் பாட்டன். மையூர்கிழானின் மகளான அந்துவஞ் செள்ளை இவனுடைய தாயார். இவனுடைய அமைச்சனாக இருந்த மையூர்கிழான் இவனுடைய தாய் மாமனாக இருக்க வேண்டும். அதாவது இவனுடைய தாயாருடன் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்று தோன்கிறது. அந்த அமைச்சனை இவன் புரோசு மயக்கினான் என்று 9ஆம் பத்துப் பதிகங் கூறுகிறது.

“மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி.”

அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசு மயக்கி யென்றது தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகித


  1. “பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தை யாண்ட இளம்பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று, வஞ்சி மூதூர்த் தந்து பிறர்க்குதவி” “அருந்திறல் மரபில் பெருஞ் சதுக்க மர்ந்த, வெந்திறல் பூதரைத் தந்திவண் நிரீஇ, ஆய்ந்த மரபிற் சாந்திவேட்டு” (9-ஆம் பத்து-பதிகம்)
  2. “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன். (சிலம்பு, நடுகற் காதை (147148) சதுக்கப்பூதர் என்பதற்குச் சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியர், 'அமரா பதியிற் பூதங்கள் ' என்று உரை எழுதியுள்ளார். கொங்குநாட்டுக் கருவூருக்கு (வஞ்சிநகர்) பிற்காலத்தில் அமராபதி என்றும் பெயர் வழங்கிற்று. இதைத்தான் அவர் அவ்வாறு எழுதினார்.