111
யாண்டில் ஏறக்குறைய கி. பி. 175-இல் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று கருதலாம். அந்த ஆண்டுக்கு முன்பே இளஞ்சேரல் இறந்து போனான் என்று சிலம்பு கூறுகிறது. எத்தனை ஆண்டுக்கு முன்பு என்பது தெரியவில்லை. ஏறத்தாழக் கி.பி. 170-இல் இறந்து போனான் என்று கொள்ளலாம். இவன் பதினாறு ஆண்டு ஆட்சி செய்தான் என்பதனால், உத்தேசம் (170-16=154) கி. பி. 154 முதல் 170 வரையில் இவன் ஆட்சி செய்தான் என்று கருதலாம்.
குடக்கோ இளஞ்சேர லிரும்பொறையின் சம காலத்திலிருந்த அரசர்கள், சேரநாட்டில் சேரன் செங்குட்டுவனும் பாண்டி நாட்டில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனும் (வெற்றிவேற் செழியன்) இருந்தார்கள். சோழ நாட்டில் சோழன் பெரும்பூண் சென்னி (பெருஞ் சோழன்) இருந்தான்.
ஒரு விளக்கம்
பதிற்றுப்பத்து 9-ஆம் பத்தின் தலைவனும் கொங்கு நாட்டின் அரசனுமாகிய இளஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறையின் மகன் இவனை (தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் என்று கருதுவது தவறு. இந்தத் தவறான கருத்தைச் சரித்திரக்காரர் பலருங் கொண்டிருந்தார்கள். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் இவன் என்று கே. என். சிவராச பிள்ளையவர்களும்[1] கே. ஜி. சேஷையரும்[2] கருதினார்கள். மு. இராகவையங்கார் அவர்கள் தம்முடைய ‘சேரன்