பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

செங்குட்டுவன்' என்னும் நூலில் இவ்வாறே தவறாக எழுதியுள்ளார். மேற்படி நூலில் சேரவமிசத்தோர் என்னுந் தலைப்பில், பெருஞ்சேரல் இரும்பொறையின் இராணியின் பெயர் அந்துவஞ் செள்ளை என்றும் இவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் இவர் எழுதியுள்ளார். இவர் கூறியதையே வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதரும் கூறியுள்ளார். (தீட்சிதர் அவர்கள் மு. இராகவையங்காரின் துணைகொண்டு சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்). அவர், தம்முடைய சிலப்பதிகார ஆங்கிலமொழி பெயர்ப்பின், முகவுரையில் 13-ஆம் பக்கத்தில் ‘சேரர் தாய்வழிப் பட்டியல்’ என்னுந் தலைப்பில், பெருஞ் சேரல் இரும்பொறைக்கும் (குட்டுவன் இரும்பொறை) வேண்மாள் அந்துவஞ் செள்ளைக்கும் பிறந்த மகன் இளஞ் சேரல் இரும்பொறை என்று எழுதுகிறார். அதாவது பெருஞ் சேரலிரும் பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று கருதுகிறார். அவர் இவ்வாறு பட்டியல் எழுதிக் காட்டுகிறார்.

செல்வக் கடுங்கோ வாழியாதன்



பெருஞ்சேரல் இரும்பொறை

(குட்டுவன் இரும்பொறை)

வேண்மாள் அந்துவஞ் செள்ளை (இராணி)



இளஞ்சேரல் இரும்பொறை[1]


  1. * (P. 12, 13 Introduction, The Silappadikaram English
    Translation by V. R. Ramachandra Dikshidar 1939)