பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

என்று தோன்றுகிறான். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்கு மக்கட்பேறு இல்லாமலிருந்து வேள்வி செய்து ஒருமகனைப் பெற்றான் என்று அறிந்தோம். அந்த வேள்வியினால் பிறந்த மகன் இவனாக இருக்கலாம் என்று தோன்றுகிறான்.[1]

யா. சே. மா. சே. இரும்பொறை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சில போர்களைச் செய்தான். அப்போர்களில் இவனுக்கு வெற்றியுந் தோல்வியுங் கிடைத்தன. விளங்கில் என்னும் ஊரில் இவன் பகைவருடன் போர் செய்து வெற்றி பெற்றான். அவ்வமயம், இந்த வெற்றியைப் பாடுவதற்கு இப்போது கபிலர் இல்லையே என்று இவன் மனவருத்தம் அடைந்தான். இவனுடைய பாட்டனான செல்வக் கடுங்கோ வாழியாதனைக் (மாந்தரஞ் சேரலைக்) கபிலர்


  1. * ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’ என்னும் பெயரினால் ஆங்கிலத்தில் முதன் முதலாகத் தமிழ் நாட்டுச் சரித்திரத்தை எழுதியவர் கனகசபைப் பிள்ளையவர்கள். அவர் காலத்தில் சங்க இலக்கியங்கள் அச்சில் வராமல் ஏட்டுச் சுவடிகளாக இருந்தன. ஆகவே சங்க இலக்கியங்களை ஏட்டுச் சுவடியில் படித்து அந்நூலை எழுதினார். அதில் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரன் செங்குட்டுவனுடைய மகன் என்று பிழையாக எழுதினார். அவர் அறியாமல் செய்த தவற்றை அவருக்குப் பிறகு வந்த டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்காரும் அப்படியே எழுதி விட்டார். அவரைப் பின்பற்றி பானர்ஜி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய 'ஜூனியர் ஹிஸ்டரி ஆப் இந்தியா' என்னும் நூலில் 94ஆம் பக்கத்தில் அதே தவற்றைச் செய்து விட்டார். கே.ஜி. சேஷையர் அவர்கள் யானைக்கட்சேய் மாந்தரம் சேரல் இரும் பொறையைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். The last great Cera of The Sangam Period by K. G Sesha Aiyer, Dr. S. K. Aiyengar Commemoration Volume. P. 217-221.