பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123



அந்தப் பகையை ஈடு செய்வதற்காகவே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் கொங்கு நாட்டுக் கருவூரின் மேல் படையெடுத்துச் சென்றான் என்று கருதத் தோன்றுகிறது. கிள்ளிவளவன் தன் போர் முயற்சியில் வெற்றியைக் கண்டான்,

சேரநாட்டின் மேற்குக் கடற்கரையில் இருந்த பேர்போன தொண்டித் துறைமுகப் பட்டினம் இவன் காலத்திலும் கொங்குச் சோழரின் துறைமுகமாக இருந்தது. தொண்டிப் பட்டினத்தின் கடற்கரையில் கழிகளும் தென்னை மரங்களும் வயல்களும் மலைகளும் இருந்தன.

“குலையிறைஞ்சிய கோட்டாழை
அவல்வயல் மலைவேலி
நிலவுமணல் வியன்கானல்
தெண்கழிமிசை தீப்பூவின்
தண்தொண்டியோர் அடுபொருந”

(புறம்-7 19-13): (தாழை-தென்னை )


இவன் நீதியாகச் செங்கோல் செலுத்தினான். 'அறந் துஞ்சும் செங்கோலையே.[1] தேவர் உலகம்போல இவனுடைய நாடு இருந்தது. 'புத்தேளுலகத்தற்று.[2] இவனுடைய ஆட்சியில் மக்களுக்கு அமைதியும் இன்பமும் இருந்தது.

குறுங்கோழியூர் கிழார் இவ்வரசனைப் பாடியுள்ளார் (புறம்-17, 20,22). பொருந்தில் இளங்கீரனார் இவனைப் பாடினார் (புறம்-53). இப்புலவரே இவன்மீது பத்தாம் பத்தைப் பாடியிருக்க வேண்டும் என்பதை முன்னமே கூறினோம். புலத்துறை முற்றிய கூடலூர்கிழாரை இந்த அரசன் ஆதரித்தான். இவரைக் கொண்டு இவன் 'ஐங்குறு நூறு' என்னும் தொகைநூலைத் தொகுப்பித்தான். ('இத் தொகை தொகுத்தார், புலத்துறை முற்றிய கடலூர்கிழார்;


  1. * (புறம்-20: 17).
  2. ** (புறம்-22:35).