பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


கணைக்கால் இரும் பொறை

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டை யரசாண்டவன் கணைக்கால் இரும்பொறை. இவன், முன்னவனுக்கு எந்த முறையில் உறவினன் என்பது தெரியவில்லை. இவனைப் பற்றிய முழு வரலாறுந் தெரியவில்லை. கொங்குச் சேரரின் துறைமுகமாகிய தொண்டிப் பட்டினத்தின் கோட்டைக் கதவில் கணக்கா லிரும் பொறை, தனக்கு அடங்காத மூவனுடைய பல்லைப் பிடுங்கிப் பதித்திருந்தான் என்று அப்பட்டினத்திலிருந்த கணைக்காலிரும் பொறையின் புலவர் பொய்கையார் கூறுகிறார்.[1]


இவன் காலத்தில் சோழ நாட்டை அரசாண்டவன் செங்கணான் என்பவன். செங்கட்சோழன் என்றும் இவனைக் கூறுவர். செங்கட்சோழன் பாண்டியனையும் கொங்குச் சேர ரையும் வென்று அரசாண்டான். சோழ நாட்டுப் போர் (திருப்போர்ப்புரம்) என்னும் ஊரில் செங்கணானுக்கும் சுணைக்கா லிரும் பொறைக்கும் போர் நடந்தது. அந்தப்போரில் கணைக்கா விரும் பொறை தோல்வியடைந்தது மல்லாமல் சோழனால் சிறைப் பிடிக்கப்பட்டு குடவாயில் (கும்பகோணம்) சிறையில்


  1. * மூவன், முழுவலி முள் எயிறு அழுத்திய கதவில், கானலந் தொண்டிப் பெருநன் வென்வேல், பெறலருந் தானைப் பொறையன். (நற்-18:2-5)