பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு

செங்கட் சோழன்
கணைக்கால் இரும்பொறை காலம்

செங்கட் சோழனும் கணைக்கால் இரும்பொறையும், கடைச்சங்க காலத்தின் இறுதியில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர்கள் என்று கூறினோம். இவர்கள் கி. பி. 6-ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் என்று சில சரித்திரக்காரர்கள் தவறாகக் கூறியுள்ளதை இங்கு விளக்கிக் காட்ட விரும்புகிறோம். சோழன் செங்கணான் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில், பல்லவ அரசர் காலத்தில் இருந்தான் என்று இவர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்குச் சான்று கிடையாது. இவர்கள் காட்டும் ஒரே சான்றும் தவறானது. அதாவது சங்ககாலப் புலவரான பொய்கையாரும் பக்தி இயக்கக் காலத்தில் இருந்த பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று இவர்கள் தவறாகக் கருதுவதுதான்.

‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பி. தி. சீனிவாச அய்யங்கார் முதன் முதலாக இந்தத் தவறு செய்தார். களவழி பாடிய பொய்கையாரும் விஷ்ணுபக்தரும் பல்லவர் காலத்திலிருந்தவருமான பொய்கையாழ்வாரும் ஒருவரே என்று தவறாகக் கருதிக்கொண்டு, பொய்கையாரால் களவழியில் பாடப்பட்ட சோழன் செங்கணான் கி. பி. ஆறாம்