பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


(1)“அமணன் ஆற்றூர் செங்காயபன் உறைய கோ
ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன்
மகன் இளங்கடுங்கோ இளங்கோ ஆகஅறுத்த கல்.”

(2)“அமணன் ஆற்றூர் செங்காயபன் உறைய கோ
ஆதன் சேரலிரும் பொறை மகன் பெருங்கடுங்கோன்
மகன் கடுங்கோ இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்.”

இவ்விரண்டு கல்வெட்டுகளும் ஒரே செய்தியைக் கூறுகின்றன. இவற்றில், பாட்டனான கோ ஆதன் சேரலிரும் பொறையும் தந்தையான பெருங்கடுங்கோனும் அவனுடைய மகனான இளங்கடுங்கோனும் கூறப்படுகின்றனர். இளங்கடுங்கோ, இளவரசனாக இருந்தபோது இந்தத் தானத்தை இம்முனிவருக்குச் செய்தான். இந்த மூன்று அரசர்களைப் பற்றி புகழியூர்க் வெட்டில் கூறியுள்ளோம்.

ஆதனவினி

கொங்குச் சேர அரசர் பரம்பரையைச் சேர்ந்தவன் ஆதனவினி. இவன் கொங்கு நாட்டின் ஒரு சிறு பகுதியை யரசாண்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஐங்குறுநூறு, முதலாவது மருதத்திணையில், வேட்கைப் பத்து என்னும் முதற் பத்தில் இவன் பெயர் கூறப்படுகிறது.[1] இவ்வரசனைப் பற்றி வேறொன்றுந் தெரியவில்லை.


  1. “வாழியாதன் வாழியவினி, நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க.” “வாழியாதன் வாழியவினி, விளைக வயலே வருக விரவலா.” “வாழியாதன் வாழியவினி, பால்பல வூறுக பகடுபல சிறக்க.” வாழியாதன் வாழிய வினி, பகைவர் புல்லார்க பார்ப்பாரோதுக.” “வாழியாதன் வாழியவினி, பசியில்லாகுக பிணி சேண் நீங்கிக.” வாழி கொ—9