பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160


முல்லை (காட்டு) நிலத்தில் வாழ்ந்தவர்கள் வரகு கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவர்கள் பசுக்களையும் ஆடுகளையும் வளர்த்தார்கள். அவைகளிலிருந்து பால் தயிர் வெண்ணெய் நெய் கிடைத்தன. அவரை துவரை முதலிய தானியங்களும் விளைந்தன.

மருத நிலங்களில் வயல்களிலே நெல்லும் கரும்பும் பயிராயின. கரும்பை, ஆலைகளில் சாறு பிழிந்து வெல்லப் பாகு காய்ச்சினார்கள். கொங்குநாடு கரும்புக்கு போர்போனது. ஆதிகாலத்தில் தமிழ் நாட்டில் கரும்பு இல்லை. கொங்கு நாட்டுத் தகடூரை - யரசாண்ட அதிகமான் அரசர் பரம்பரையில், முற்காலத்திலிருந்த ஒரு அதிகமான் கரும்பை எங்கிருந்தோ கொண்டுவந்து தமிழகத்தில் நட்டான் என்று ஔவையார் கூறுகிறார். (புறநானூறு 98:1-4, 392:20-21) கரும்புக்கு பழனவெதிர் என்று ஒரு பெயர் உண்டு , (பழனம்-கழனி. வெதிர்-மூங்கில்) மூங்கிலைப் போலவே கரும்பு கணுக்களை யுடையதாக இருப்பதனாலும் சுழனிகளில் பயிர் செய்பப்படுவதாலும் பழன வேதிர் என்று கூறப்பட்டது. மருத நிலங்களில் உழவுத் தொழிலுக்கு எருமைகளையும் எருதுகளையும் பயன்படுத்தினார்கள், குறிஞ்சி முல்லை நிலங்களில் இருந்தவர்களை விட மருத நிலத்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள்.

பருத்திப் பஞ்சும் கொங்கு நாட்டில் விளைந்தது. பருத்தியை நூலாக நூற்று ஆடைகளை நெய்தார்கள், நூல் நூற்றவர்கள் பெரும்பாலும் கைம்பெண்களே.

அக்காலத்தில் பண்டமாற்று நடந்தது. அதாவது காசு இல்லாமல் பண்டங்களை மாற்றிக் கொண்டார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள். குளங்களிலும் ஏரிகளிலும் மீன் பிடித்து வந்து அந்த மீன்களை நெல்லுக்கும் பருப்புக்கும் மாற்றினார்கள், பால் தயிர் நெய்களைக் கொடுத்து அவற்றிற்கு ஈடாக நெல்லைப் பெற்றுக் கொண்டார்கள்.