பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

செய்தன. அவ்வாறு வந்த யவனக் கப்பல்களை அராபியர் கடற்கொள்ளைக்காரரை ஏவி கொள்ளையடித்தனர். அதனால் யவனக் கப்பல்கள் இந்தியாவுக்கு வருவது தடைப்பட்டது. அராபியர் மட்டும் இந்தக் கப்பல் வாணிகத்தை ஏகபோகமாக நடத்திப் பெரிய இலாபம் பெற்றார்கள். அவர்கள் சேர நாட்டில் உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப் பட்டினத்தின் ஒரு பகுதியில் தங்கி வாணிகஞ் செய்தார்கள். முசிறியில் அவர்கள் இருந்து வாணிகஞ் செய்த இடம் பந்தர் என்று பெயர் பெற்றிருந்தது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். அதன் பொருள் அங்காடி, பண்டகசாலை, துறை முகம் என்று பொருள். சென்னை மாநகரில் ‘பந்தர் தெரு’ என்னும் பெயருள்ள ஒரு கடைத் தெரு இருக்கிறது. இங்கு முன்பு முஸ்லிம்கள் அதிகமாக வணிகஞ் செய்திருந்தார்கள். அதனால் அந்தத் தெருவுக்கு இப்பெயர் ஏற்பட்டது. முசிறித் துறைமுகத்தில் அராபியர் பந்தர் என்னும் இடத்தில் வாணிகஞ் செய்திருந்ததை பதிற்றுப் பத்துச் செய்யுளினால் அறிகிறோம்.[1]

உரோமாபுரி சாம்ராச்சியத்தை யரசாண்ட அகஸ்தஸ் (Augustus) சக்கரவர்த்தி காலத்தில் யவன வாணிகர் நேரடியாகத் தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அகஸ்தஸ் சக்கரவர்த்தி கி.மு. 29 முதல் கி. பி. 14 வரையில் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் அலக்சாந்திரியம்

    • “இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்கல

    வெறுக்கை துஞ்சும் பந்தர் கமழுந்தாழைக் கானலம்
     பெருந்துறை” (6-ஆம் பத்து. 5:3-5) (“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு,பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்” (7-ஆம் பத்து. 7:1-2) “கொடு மணம்பட்ட வினைமாண் அருங்கலம், பந்தர்ப் பயந்த பலர்புகழ்முத்தம்
    (8-ஆம் பத்து , 4:5-6)