பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

221

திரு. ஐராவதம மகாதேவன் இதைக் கீழ்க்கண்டவாறு படிக்கிறார்.[1] 'கருவூர் பொன் வாணிகன், தத்தி அதிட்டானம்'

வாணிகன் நத்தி என்பதை வாணிகன்+அத்தி என்று பிரித்து, கருவூர் பொன் வாணிகன் அத்தியினுடைய அதிட்டானம் (இடம்)* என்று பொருள் கூறுகிறார்.

இவர்கள் 'கருவூர் பொன் வாணிகன்...அதிட்டானம்' என்று வாசித்தது முழுவதும் சரியே, தவறு இல்லை. ஆனால், இரண்டாவது வரியின் முதல் மூன்று எழுத்துகளை வாசித்ததில் தவறு காணப்படுகிறது. இந்த எழுத்துகளில் கல் பொளிந்து எழுத்துகளின் சரியான உருவம் தெரியவில்லை. இக்காரணத்தினால் மகாலிங்கம் அவர்கள் இவ்வெழுத்துகளை நேர்த்தி என்று வாசிக்கிறார். மகாதேவன் அவர்கள் நத்தி என்று வாசிக்கிறார். இப்படிப் படிப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. இரண்டாவது வரியின் முதலெழுத்தை உற்றுநோக்கினால் அது பொ என்று தோன்றுகிறது. அடுத் துள்ள இரண்டு எழுத்துகளையும் சேர்த்து வாசித்தால் பொத்தி என்று படிக்கலாம். அதாவது கருவூர் பொன் வாணிக னுடைய பெயர் 'பொத்தி' என்பது. ஆகவே இந்த எழுத்து களின் முழு வாசகம் இது:

கருவூர் பொன் வாணிகன்
பொத்தி அதிட்டானம்'

கருவூரில் பொன் வாணிகம் செய்த பொத்தி என்பவர் இந்த அதிட்டானத்தை (முனிவர் இருக்கையை) அமைத்தார் என்பது இதன் கருத்து, இருக்கையை யமைத்தார் என்றால், குகையிலுள்ள பாறைகளைச் செப்பஞ் செய்து கற்படுக்கைகளை அமைத்தார் என்பது பொருள்,


  1. * (No 66. P. 67. Seminar on Inscriptions, 1966)