பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228


மகாதேவன் அவர்கள் இதைத் தம்முடைய கட்டுரையில் ஆராய்கிறார்.[1] இது இரண்டு வரிகளில் எழுதப்பட் டிருக் கிறது. முதல் வரியில் பதினைந்து எழுத்துகளும், இரண்டாம் வரியில் பதினொரு எழுத்துக்களும் உள்ளன. (படம் காண்க)

இதை இவர் கீழ்க்கண்டவாறு படிக்கிறார்.

1. நல்லிஊர் ஆ பிடன் குறும்மகள்

2. கீரன் நோறி செயிபித பளி

இவ்வாறு படித்த பிறகு, நல்லியூர் பிடன் மக்களாகிய கீரனும் ஓரியும் செய்வித்த பள்ளி என்று விளக்கங் கூறுகிறார். கீரனும் ஓரியும் என்று இரண்டு மக்கள் இருந்தனர் என்று கூறிய இவர், இன்னொரு இடத்தில் கீரன் நோரி என்பவன் ஒரே மகன் என்று எழுதியுள்ளார்.**(Historical Tamil Brahmi Inscription Kula Lumpur 1966) இதில் மூன்றாவது எழுத்தாகிய லி மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

இந்தக் கல்வெட் டெழுத்தை இவர் நேரில் பார்த்துக் கையால் எழுதியிருக்கிறதாகத் தோன்றுகிறது. பார்த்து எழுதியதில் இவர் எழுத்துக்களைத் தவறாக எழுதியிருக்கிறார் என்பது தெரிகின்றது. இந்த 296-ஆம் எண்ணுள்ள

.


  1. *(No. 59 Page 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil-Brahmi Inscriptions. I. Mahadevan. Paper read at the Tamil Conferenec Ceminar held at Kula Lumpur. 1:66