பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242


கடுங்கோ வாழியாதனும் வெவ்வேறு அரசர் என்பதும் இவருக் கும் யாதொரு பொருத்தமும் இல்லை என்பதும் வெளிப்படை. திரு. மகாதேவன் செல் என்னும் பிழையான பொருளற்ற சொல்லை வைத்துக் கொண்டு செல்வக் கடுங்கோவுடன் பொருத்துவது ஏற்கத்தக்கதன்று. 'செல்லிரும் பொறை' என்று எந்த அரசனுக்கும் பெயர் இருந்ததில்லை என்பதைச் சங்க இலக்கியம் பயின்றோர் நன்கறிவார்கள்.

கல்வெட்டுகள் இரண்டாவது அரசனாகக் கூறுகிற பெருங் கடுங்கோனைப் பதிற்றுப் பத்தின் 8-ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் திரு. மகா தேவன் பொருத்திக் கூறுவதும் தவறு. இவ்விரண்டு அரசருகளுக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை. ஏனென்றால் 8-ஆம் பத்தில் பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடுகிற அரிசில்கிழார் அவனுடைய அமைச்சனாக இருந்தவர். மேலும் அவன் செய்த தகடூர்ப் போரில், போர்க்களத்தில் உடன் இருந்தவர். அவர் இவ்வரசனைப் பாடிய செய்யுட்களில் இவனைக் கடுங்கோன் என்று ஓரிடத்திலாவது கூறவில்லை. தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறைக்குக் கடுங்கோன் என்று பெயர் இருந்திருக்குமானால் அந்தச் சிறப்பான பெயரை அவர் கூறாமல் விட்டிருப்பாரா ? ஆகவே சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோன் பதிற்றுப்பத்து 8-ஆம் பத்துத் தலைவனாகிய பெருஞ்சேர லிரும்பொறை யல்லன் என்பது வெளிப்படை. ஐ. மகாதேவன் இருவரையும் ஒருவராக இணைத்துப் பிணைப்பது ஏற்கத்தக்கதன்று.

கல்வெட்டுகள் கூறுகிற இளங்கடுங்கோவைப் பதிற்றுப் பத்து 9-ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும் பொறையுடன் திரு. மகாதேவன் பொருத்திக் கூறுவதும் தவறாக இருக்கிறது. இளஞ்சேரலிரும் பொறை மீது