இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
245
சரித்திரத்தில் குழப்பம் உண்டாக்காம லிருப்பதே இப்போ தைக்குச் சரி என்று தோன்றுகிறது.
இந்தச் சாசனங்களில் காணப்படுகிற அரசர்கள் கொங்கு நாட்டை யரசாண்ட இரும்பொறையரசர் மரபைச் சேர்ந்தவர் என்பதும் இவர்களும் கொங்கு நாட்டை யரசாண்டவர்கள் என்பதும் திட்டமாகத் தெரிகின்றன. ஆனால் இவர்களின் வரலாறு தெரியவில்லை .
கொங்கு நாட்டு மலைகளில், இன்னும் சில பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் இருக்கும் என்று தோன்றுகிறது. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். முக்கியமாகக் கொங்கு நாட்டவர் இதுபற்றி முயற்சி செய்வார்களாக.