30
கோடலேயன்றி உழுத இடங்கள் தோறும் ஒளியையுடைய திருமணிகளை எடுத்துக்கொள்ளு நாடன வுரைக்க. கபிலரும் கொங்கு நாட்டில் மணிக்கல் கிடைத்ததைக் கூறுகிறார். "வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின், இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம், அகன்கண் வைப்பின் நாடுகிழவோனே" (7ஆம் பத்து, 6: 18-20) “திருமணி பெறுவார் அந்நாட்டா ராகக் கொள்க” என்பது பழைய உரை.
பொதுவாகக் கொங்கு நாட்டில் திருமணிகள் கிடைத்
ததைப் புலவர் கூறினாலும் சிறப்பாகப் படியூரில் கிடைத்ததை
அவர்கள் கூறவில்லை, ஆனால் அக்காலத்து யவனர்கள்
எழுதியுள்ள குறிப்புகளிலிருந்து படியூரில் திருமணிகள்
கிடைத்ததையும் அதை யவன வணிகர் கப்பல்களில்
வந்து வாங்கிக் கொண்டு போனதையும் அறிகிறோம். பிளைனி
(Pliny) என்னும் யவனர் இச் செய்தியை எழுதியுள்ளார்.
இவர் படியூரை படொரஸ் (Paedoros) என்று கூறுகின்றார்.
படொரஸ் என்பது படியூரென்பதன் திரிபு. இச்சொல்லின்
(படியூரைப்பற்றி Indian Antiquary Vol V. P. 237 இல்
காண்க) இந்தப் படியூர் மணிச் சுரங்கத்தைப்பற்றி வேறு
ஒன்றும் தெரியவில்லை. மிகப் பிற்காலத்தில் கி.பி. 1798-இல்
இவ்வூர் வாசிகள் மறைவாக மணிக் கற்களை எடுத்தனர்
என்று கூற்ப்படுகின்றது. இதை எப்படியோ அறிந்த ஒரு
ஐரோப்பியன் கி. பி. 1819-20 இந்தச் சுரங்கத்தை
வாடகைக்கு எடுத்துத் தோண்டியதில் அந்த ஒரே ஆண்டில்
2,196 மணிகள் (Beryls) கிடைத்தனவாம். அவை; 1,201
பவுன் மதிப்புள்ளவையாம். பிறகு இந்தச் சுரங்கத்தில் நீர்
சுரந்து அகழ முடியாமற் போய்விட்டது. (Rices Ep. Car
IV P 4)
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியிலும் நீலக்கற்கள் கிடைத்தன.