பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

“குடா அது
இரும்பொன் வாகை பெருந்துறைச் செருவில்
பொலம் பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றந் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன, வளம்.” (அகம், 199:18-23)

பூழிநாட்டுக்குக் கொங்காணம் என்று பெயர் இருந்த தென்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கே. ஜி. சேஷ ஐயர் முதலியோர் கூறுவது தவறு.[1] கொங்காண நாட்டரசனாகிய நன்னன் பூழிநாட்டை வென்று சிலகாலம் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான். ஆனால் பூழிநாட்டுக்குக் கொங்காணம் என்று பெயர் இருந்ததில்லை.

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பூழிநாட்டை மீட்டுக் கொண்டதையறித்தோம். ஆனாலும் பூழிநாடு சேர அரசர்களுக்கு இல்லாமல் கொங்குச் சேரருக்கு உரியதாக இருந்து வந்தது. ஏனென்றால் உள் நாடாகிய கொங்கு நாட்டுக்குக் கடற்கரையும் துறைமுகமும் இல்லாதபடியால், கொங்கு நாட்டை யரசாண்ட கொங்குச் சேரர்களுக்குத் துறைமுகப்பட்டினம் வேண்டியதாக இருந்தது. கொங்கு நாட்டையடுத்து மேற்கிலிருந்த பூழிநாட்டிலே தொண்டி, மாந்தை என்று இரண்டு துறைமுகப்பட்டினங்கள் இருந்த படியால் இத்துறைமுகங்களையுடைய பூழிநாட்டைச் சேர


  1. + (P. 33. Cera Kings of tke Sangam Period K, G. Sesha Aliyar 1937 சங்க காலச் சிறப்புப் பெயர்கள்" பக்கம் 258, 385, "வேளிர் வரலாறு பக்க ம். 65.)

கொ -3