பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

செய்தான். கழுவுளும் பலமுடையவனாக இருந்தபடியால் அவனை எதிர்த்துப் போர் செய்தான். பெருஞ்சேரல் இரும் பொறைக்கு உதவியாகப் பதினான்கு வேள் அரசர் கழுவுளுக்கு எதிராகப் போர் செய்து கழுவுளை வென்றார்கள்.[1] கடைசியில் கழுவுள் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கீழடங்கினான். காமூர் சேரரின் கொங்கு இராச்சியத்தில் சேர்ந்தது. இந்தப் போர், பெருஞ்சேரலிரும்பொறை கொல்லிக் கூற்றத்தையும் தகடூர் நாட்டையும் பிடிப்பதற்கு முன்பு நடந்தது. கொங்குச் சேரர் தங்கள் இராச்சியத்தைப் பெரிதாக்கிய காலத்தில் அவர்களில் ஒருவனான பெருஞ்சேரலிரும்பொறை கழுவுள் மேல் படை யெடுத்துச் சென்று போர் செய்தான். அவனுக்கு உதவியாகப் பதினான்கு வேளிர் வந்து கழுவுள் மேல் போர் புரிந்தார்கள். கடைசியில் கழுவுள் தோற்றுப் பெருஞ்சேரலிரும்பொறைக்கு அடங்கினான்.

குமணன்

கொங்கு நாட்டில் முதிரம் என்னும் ஊர் இருந்தது. அவ்வூரில் குமணன் என்னும் அரசன் ஆண்டு வந்தான், வள்ளலாக இருந்த அவன் புலவருக்கும் மற்றவர்களுக்கும் தானதருமம் செய்தான்.[2] பெருஞ்சித்திரனார் இவனைப் பாடிய செய்யுள்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.[3]


  1. “வீயாவிழுப்புகழ் வின்தோய் வியன்குடை, ஈரெழுவேளிர் இயைந் தொருங்கெறிந்த கழுவுள் காமூர்” (அகம். 185:11-33)
  2. “அதிரா யாணர் முதிரத்துக் கிழவன், இவண்விளக்கு சிறப்பின் இயல்தேர்க் குமணன்” (புறம். 158125-76}
  3. “அரிது பெறு பொலங்கலம் எளிதினின் வீசி, நட்டோர் தட்ட நல்லிசைக் குமணன், மட்டார் மறுகின் முதிரத் தோனே”. (புறம். 160:11-3)
    • “பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேற்குமணன்” (புறம். 163:8.9)