61
யாகத் துளு நாட்டரசனின் மேல் படையெடுத்துச் சென்றான். துளு நாட்டரசனின் சேனாதிபதியான மிஞிலி, பாழி என்னும் போர்க்களத்தில் ஆய் எயினனுடன் போர் செய்து அவனைக் கொன்றான்.[1] இந்த வெளியன் வேண்மான் ஆய் எயினன், நாட்டரசனாகிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலினுடைய சேனாதிபதி, துளுநாட்டு நன்னன் தான் கருதியது போல் புன்னாட்டைக் கைப்பற்ற முடியவில்லை.
புன்னாட்டரசர் கொங்குச் சேரர்களுக்குக் கீழ் அடங்கியிருந்தனர் என்று தெரிகின்றது. பெரும்பூண் சென்னி என்னுஞ் சோழன் புன்னாட்டைக் கைப்பற்ற எண்ணித் தன்னுடைய சேனாபதி பழையன் என்பவன் தலைமையில் தன்னுடைய சேனையை யனுப்பினான். பழையன் புன்னாட்டுக் கட்டூரின் மேல் படையெடுத்துச் சென்றான். புன்னாட்டரசனுக்கு உதவியாகக் கங்க அரசன், கட்டியரசன், அத்தி, புன்றுறை முதலியவர்கள் இருந்து பழையனுடன் போர் செய்தார்கள். அப்போரில் பழையன் இறந்து போனான்.[2]
புன்னாட்டரசர் சங்க காலத்துக்குப் பிறகும் கி. பி. 5-ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் அரசாண்டனர். புன்னாட்டில் கிடைத்த ஒருசாசன எழுத்து புன்னாட்டரசர் சிலருடைய பெயர்