72
கூறுகிறது.) சேர அரசரின் இளையபரம்பரையைச் சேர்ந்த அந்துவன் பொறையன் கொங்கு ராச்சியத்தை அமைத்தான்.
அந்துவன் பொறையன், தன்னுடைய மகனான செல் வக்கடுங்கோ வாழியாதனுக்கு ஆவி நாட்டுச் சிற்றரசனாகிய வேளாவிக் கோமான் மகளாகிய பதுமன்தேவி என்பவளைத் திருமணஞ் செய்வித்தான். அவனுடைய தாயாதித் தமயனாகிய உதியஞ் சேரலும் தன்னுடைய மகனாகிய (இமய வரம்பன்) நெடுஞ் சேரலாதனுக்கு மேற்படி வேளாவிக் கோமானின் இன்னொருமகளைத் திருமணஞ் செய்வித்திருந்தான். எனவே நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் மணஞ் செய்திருந்த மனைவியர் தமக்கை தங்கையர் என்பது தெரிகின்றது.
அந்துவன் பொறையனுக்கு அந்துவஞ் செள்ளை என்று ஒருமகள் இருந்தாள் என்று திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஊகிக்கிறார்.[1] இவர் கூற்றுக்குச் சான்று இல்லை, வெறும் ஊகமாகக் கூறுகிறார்.
அந்துவஞ் சேரல் இரும்பொறை, வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் செய்து இறந்துபோனான் என்று திரு. கே. ஜி. சேஷையர் கருதுகிறார். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் அந்துவஞ் சேரலும் ஒருவரே என்று அவர் கருதுகிறார்.[2] ஆனால், அந்துவஞ் சேரலும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் ஒருவரே என்பதற்கு அவர் சான்று காட்டவில்லை. புறம் 62, 63-ஆம் செய்யுட்களின் அடிக்குறிட்புகள், "சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெரு விறற் கிள்ளியும் போர்ப்