74
செல்வக் கடுங்கோ வாழியாதன்
மாந்தரன் 1
அந்துவன் பொறையனுக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன். (செ. க. வா. ஆ.) சிக்கற் பள்ளி என்னும் ஊரில் இறந்தபடியால் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று இவன் பிற்காலத்தில் பெயர் பெற்றான். செல்வக் கோமான் (7 ஆம் பத்து 7:23) என்று பெயர் பெற்ற இவன் போரில் மிக்க வலியுடையவனாக இருந்தது பற்றிக் கடுங்கோ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். ‘மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல், துப்புத் துறை போகிய கொற்ற வேந்தே’ என்று இவனைக் கபிலர் கூறுவது காண்க.[1] (திறல்ஆற்றல், வல்லமை). ‘செல்வக் கோவே சேரலர் மருக’ என்று கபிலர் கூறுகிறார்.[2] ஆதன் என்பது இவனுக்குரிய பெயர்.
செ. க. வா. ஆதனுக்கு மாந்தரன், மாந்தரஞ்சேரல் என்னும் பெயரும் இருந்தது. இவ்வரசன் காலத்தில் வாழ்ந்தவரும் சேர அரசர் பரம்பரையை நன்கறிந்த