பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பெயருடன் பாண்டி நாட்டு மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுக்காவில் சேர்ந்திருக்கிறது. (மூத்தவழி) சேரநாட்டுச் சேரர்

உதியஞ் சேரல்= 
வேண்மாள் நல்லினி 
           |
      |-------------|

இமயவரம்பன் பல்யானைச் நெடுஞ்சேரலாதன்செல்கெழுகுட்டுவன் = வேளாவிகோமான

பதுமன் தேவி I
     (இளைய வழி)

கொங்கு நாட்டுப் பொறையர் அந்துவன் பொறையன் = பொறையன் பெருந்தேவி

           |

செல்வக் கடுங்கோ வாழியாதன்= வேளாவிகோமான் பதுமன் தேவி II

 செ. க. வா. ஆதனுக்கும் அவனுடைய அரசியாகிய பதுமன் தேவிக்கும் இரண்டு ஆண் மக்கள் பிறந்தனர் என்று அறிகிறோம். இவ்விரு புதல்வர்களில் ஒருவன் பெருஞ்சேரல் இரும்பொறை. (பிற்காலத்தில் தகடூரை வென்று புகழ் பெற்றவன். 8ஆம் பத்து பதிகம்). இளைய மகன் பெயர் குட்டுவன் இரும்பொறை என்பது.
   தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று சிவராச பிள்ளை கருது கிறார்.** இவர் கருதுவது தவறு, செல்வக் கடுங்கோ வாழி

___________

  • வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை , இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித், தொல்கடன் இறுத்த

வெல்போர் அண்ண ல். 7ஆம் பத்து 10:20-22

    • (P. 124. The Chronology of early Tamils 1932)