79
யாதனுக்கு இரண்டு மக்கள் இருந்ததை யறியாமல், ஒரே மகன் இருந்தான் என்று கருதிக் கொண்டு இவ்வாறு எழுதினார் என்று தோன்றுகிறது. கே. ஜி. சேஷ ஐயரும் இதே தவற்றைச் செய்துள்ளார்.[1] நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே தவற்றைச் செய்தேன். தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறையும் குட்டுவன் இரும்பொறையும் ஒருவரே என்று கருதினேன்.[2]அது தவறு என்பதை இப்போது அறிந்து திருத்திக் கொண்டேன். செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குத் துணைப் புதல்வர் (இரண்டு பிள்ளைகள்) இருந்தனர் என்பது திட்டமாகத் தெரிகிறது.
செ. க. வா. ஆதன் மேல் - பதிற்றுபத்து 7ஆம் பத்தைப் பாடியவர் கபிலர், பறம்பு நாட்டின் அரசனாக இருந்த கொடை வள்ளல் என்று புகழ்பெற்ற பாரி மன்னனின் புலவராக இருந்த கபிலர், அம்மன்னன் இறந்த பிறகு கொங்கு நாட்டுக்கு வந்து செ.க.வா. ஆதனைப் பாசறையில் கண்டு, அவன்மீது 7 ஆம் பத்துப் பாடினார்.
செ.க.வா. ஆதன் இருபத்தைந்துயாண்டு அரசாண்டான் என்று ஏழாம்பத்துப் பதிகத்தின் அடிக் குறிப்பு கூறுகிறது.
இவ்வரசன் திருமாலை வழிபட்டான். அந்தத் திருமாலின் கோயிலுக்கு ஒகத்தூர் என்னும் ஊரைத் தானங்கொடுத் தான்[3] இவன் தன்னுடைய புரோகிதனைப் பார்க்கிலும்