பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

என்று அறியாமல் திகைத்துப் போனதாக அவரே கூறுகிறார்,*[1]

வயிரியரை (இசைவாணரை) இவன் ஆதரித்தான். தான் ஆதரித்ததல்லாமல், தான் இல்லாதபோது அவர்கள் அரண்மனை வாயிலில் வந்தால் தன்னைக் கேளாமலே அவர்களுக்குப் பொருளையும் குதிரைகளையும் வண்டிகளையும் கொடுத்தனுப்பும்படி தன்னுடைய அரண்மனை அதிகாரிகளுக்குக் கட்டளை யிட்டிருந்தான்.[2] இவனுடைய கொடைச் சிறப்பைக் கபிலர் நன்றாக விளக்கிக் கூறுகிறார். ‘என்னைப் புரந்த பாரி வள்ளல் இறந்து போனபடியால் உம்மிடம் பரிசுபெற உம்மை நாடி வந்தேன் என்று நினைக்க வேண்டாம். செல்வக் கடுங்கோவாழியாதன் பெரிய வள்ளல், இரவலரை ஆதரிக்கும் வண்மையன் என்று பலருங் கூறக்கேட்டு நேரில் கண்டு மகிழ வந்தேன்’ என்று கூறுகிறார்'.

"புலந்த சாந்தின் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவன் பாரி முழவுமண் புலர இரவலர் இனைய வாராச் சேட்புலம் படர்ந்தோன் அளிக்கென இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன் 'ஈத்த திரங்கான் ஈததொறும் மகிழான் ஈத்தொறும் மாவள்வியன் என நுவலுநின் நல்லிசைதர வந்திசின்.(7 ஆம் பத்து-1:7-14).

இவன்மீது ஏழாம் பத்தைப் பாடிய கபிலருக்கு இவ்வரசன் பெரும் பொருளைப் பரிசாகக் கொடுத்தான். கைச்


  1. (புறம்-387)
  2. ‘புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே, எஃகு படை யறுத்த கொய்சுவல் புரவி, அலங்கும் பாண்டில் இழையணித் தீமென, ஆனாக் கொள்கையை’ (7ஆம் பத்து 4; 8-11).