பக்கம்:கொடி முல்லை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கொடிமுல்லை


'நாள்பார்க்க வேண்டு' மென்றான் மாமல் லன். 'நன்
னாளென்ன செய்யு?' மென்றான் அமைச்சன்."வானக்
கோள்பார்க்க வேண்டு' மென்றான் அரசன். 'வேந்தே!
கடைக்காலக் கொள்கையிது; வீணர் சூழ்ச்சி;
ஆள்வினையை நம்பாது மக்கள் வீழும்
அளறுமிகு முள்நிறைந்த பாட்டை; காலில்
தேள் கொட்ட நெறிதென்னைக் கேற லுண்டோ?
செப்பிடுவீர்'என வணங்கி அமைச்சன் சொன்னான்.

'இக்கால வழக்கத்தைச் சார்ந்து நாட்டில்
இருந்துகுடி செய்யவில்லை என்றால், மக்கள்
பொக்கையனால் போனதுவே பொரிமா வென்பார்;
போன பொரி மாத்தேறார்; புளிபி ழிந்த
தொக்காம் இக் கொடும்பழக்கம்; அதற்கு நாமோ
தோற்பாவை; அதைமீற முடியா தப்பா!
எக்காலம் பகுத்தறிவு பெற்று மக்கள்
எதிர்ப்பாரோ அன்றிடரும் தீரும்' என்றான்.

இசைந்திட்டான் அரைமனதாய் நுழைபு லத்தான்!
என் செய்வான்? 'நம்மக்கள் நிலையில் வாறே
திசைகெட்டுப் போனதிலோ புதுமை இல்லை;
செய்தித்தாள் எடுத்தெழுதி நன்னாள் பார்த்துத்
திசைபார்த்துச் செல்க' என்றான். நிறைந்த ஏரிச்
சிறகியென வாள்மறவர் பறந்தார் ஊரார்
இசைமீட்டி 'மாமல்லன் எண்ணம் முற்றும்
இனிதுமுடி வடைக"வென்று வாழ்த்தி னாரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/10&oldid=1252848" இலிருந்து மீள்விக்கப்பட்டது