பக்கம்:கொடி முல்லை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

21

எழுந்திருந்து கிளிக்கூண்டின் அருகில் வந்தாள்;
'என் உயிரே? பசுங்கிள்ளாய்! அவன்பேர் சொல்லப்
பழகிவிட்டாய்; நீஎன்றன் உண்மைத் தோழி!
பறந்துபோ அவனருகே; துயரைச் சொல்லு;
விழுதாலின் பழந்தருவேன்’ என்றாள்; கிள்ளை
மீண்டுமவன் பேருரைக்கக் களித்தாள்! அல்லி
அழுதோடி அங்குவந்தாள்; 'இணைந்தி ருந்த
ஆண்புறாவைக் காலைமுதல் காணோ' மென்றாள்.

'எங்கெங்கோ தேடிவிட்டேன்; காணோ மம்மா?
என் செய்வேன்? ஒருநொடியும் பேட்டை விட்டுத்
தங்கினதைக் கண்டதில்லை' என்றாள் அல்லி,
'சரி! தேடிக் கொண்டுவந்து சேர்ப்பாய்! இன்றேல்
இங்கிருந்து விலக்கிடுவேன்’ என்று சீறி
'எழுந்தோடிப் பா'ரென்றாள் முல்லை; காலைத்
திங்களைப்போல் ஒளியிழந்த கண்ணாள்! அல்லி
செடிகொடிகள் மரக்கிளைகள் தேடிப் பார்த்தாள்.

கொடிமுல்லை தனித்திருந்த புறாவைத் தூக்கிக்
கூறுகின்றாள்; “நீபேதை! நாட்டில் அன்புப்
பிடியினிலே விடுபட்டார் இலவே இல்லை;
'பெண்களெலாம் வகையறியா தானைப் பார்த்துக்
குடிகெடுத்தார், கூத்தியர்பாற் சென்றார்' என்று
கூசாது பழிக்கின்றார்; வற்றா அன்பைக்
கொடுத்திருந்தால் தலைவன்தன் தலைவி விட்டுக்
குறுக்குவழி செல்வானோ? நீதான் சொல்லேன்!”

என்றுரைத்துக் கொண்டிருந்தாள் முல்லை; அங்கே
இறங்கிற்றுப் பிரிந்துசென்ற சேவற் புள்ளும்;
சென்றோடி அதைப் பிடித்தாள்; காலில் ஏதோ
தென்பட்ட (து); அதையவிழ்த்தாள்; வெள்ளைத் தோலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/27&oldid=1252963" இலிருந்து மீள்விக்கப்பட்டது