பக்கம்:கொடி முல்லை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கொடி முல்லை


'முன்பாக இங்கிருந்து தப்பி ஓடிப்
பிழைத்துப்போ' என்றுமுக மூடி சொன்னான்;
'அன்'யென்றான் அழகன்கை கூப்பி நின்றான்;
அவன் வந்த நிலவறையின் வழியே மீண்டான்.


              
            
பெருந்துயிலில் நலம்பாடி ஆழ்ந்தி ருந்தான்;
பிரப்பம்பாய் விட்டழகன் எழுந்தான்; இன்பப்
பெருக்காம் நற் றமிழ்ப்பாட்டு சுவர்கள் மோதிப்
புரண்டங்குப் பாய்ந்தோடும்! அவன்மெய்ப் பாட்டை
உருவாக்கச் சொல்லுண்டோ? உவமை யுண்டோ?
உளிஅரசன் நலம்பாடி துரங்கும் கட்டில்
அருகினிலே போய்ப் 'பள்ளி எழுக’ என்று
திருப்பாவை அத்தனையும் ஒப்பித் தானே!

எழுந்திருந்தான் தமிழ்ப்புலவன்: அழகன் நோக்கி
'ஈதென்ன புதுமையடா..? சிலநா ளாய்நீ
அழுதிங்குக் கிடந்தாயே; இன்றுன் போக்கில்
பலமாறி விட்ட தென்றான். அழகன் சொல்வான்:
"கொழுகொம்பைக் கொடிசுற்றிக் கொண்ட தண்ணே!
குளிர்தேனை ஈமொய்த்துக் கொண்ட தண்ணே!
பழுவேறிச் சிறுமுயலார் முழுநி லாவைப்
பற்றிவிட்டார்! சிரிக்காதே! உண்மை!’ என்றான்.

கொடிமுல்லை நிலைசொல்லிப் பணிப்பெண் அல்லி
கூப்பிட்டுப் போனவழி விளக்கிச் சொன்னான் :
கொடிமுல்லைப் பெண்ணோடே இரவு முற்றும்
கூடிஇன்பம் அடைந்திருந்த நிலையைச் சொன்னான்:
'கொடுவாளால் மாணவன்மன் பதுங்கி என்னைக்
கொல்வதற்கு நினைத்திருந்தான்; அந்த வேளை
தடுத்தாண்டான் முகமூடி, யாரோ அந்தத்
தமிழ்மறவன்? நீடுழி வாழ்க’ என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/36&oldid=1253077" இலிருந்து மீள்விக்கப்பட்டது