பக்கம்:கொடி முல்லை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 13


அழகன் மாணவன்மனை உளியால் குத்தினான்
குகை கொலைக்கள மாயிற்று.

ன் பத்தில் திளைத்தழகன் வந்தான்; தச்சர்
இயற்றுங்கற் கோயிலின் முன் நின்றான்; சொல்வான்:
'முன்னவர்கட் கெட்டாத உங்கள் சொந்தக்
கற்பனையை, முழுத்திறத்தைக் காட்டி விட்டீர்;
என் பெயரை நிலைநாட்டி விட்டீர் ; வாழி!
எழுத்தினிலும் தொழிலினிலும் புதுமை கண்டால்
முன்னேறும் நம்நாடு; விரைவில் கோயில்
முடித்திடுவீர்!’ என்றவரை ஊக்கி னானே!

மலைக்குகையை அவன்நோக்கி நடந்தான்; செல்லும்
வழியுள்ள பொருளெல்லாம் மாறி மாறிச்:
சிலைவிழியாள் கொடிமுல்லை உருவைக் காட்டும்;
சிரித்'திரவு வரைமனமே பொறுப்பாய்’ என்றான்;
'குலைத்திடுவார் இங்குண்டோ? அவளும் நானும்
குளம் அல்லி, நலம்பாடி அன்று சொன்ன
மலையினுக்கும் மடுவிற்கும் உள்ள வேறு
பாடுண்மைக் காதலுக்கு வணங்கும்!' என்றான்.

குகையினிலே அவன் செதுக்கி வைத்திருக்கும்
கொடிமுல்லைச் சிலையருகே நின்றான்; 'நீயோ
நகைக்கின்றாய்: பேசாயோ? எனைவாழ் விக்கும்
நற்கலையே! நானடிமை உனக்கெந் நாளும்!
பகைக்கஞ்சேன்; என்கலையின் பரிசு நீயே!
பார்க்கின்றாய்! பேசாயோ? நாலி ரண்டு
தொகைப்பாட்டே இங்குள்ளோர் உனைஎந் நாளும்
தொழுதிருக்க நான் சமைத்தேன்; வாழி' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/38&oldid=1253083" இலிருந்து மீள்விக்கப்பட்டது