பக்கம்:கொடி முல்லை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 14


அழகன் கொலைக்குற்றம் சாற்றப் பட்டான்
அவையில் அறம் சார்பாக வாதாடியும் அழகன்
இறப்பதே தீர்ப்பென அரசன் கூறினான்.

ல்லவனை எதிர்பார்த்துக் காவ லர்கள்,
படைத்தலைவன், மறையோதி. நுழைபு லத்தான்,
நல்லநெறி நூலுணர்ந்தோர், சிறைகாப் பாளன்,
நலம்பாடி முதலியவர் அவையில் சூழ்ந்தார்!
அல்லெல்லாம் புயலடித்த சிற்றுார் போல
அழகனங்குக் காவலர்கள் நடுவில் நின்றான்!
கொல்லேறு போல்மல்லன் வந்தான்; 'இந்தக்
குற்றத்திற் குரியதென்ன? சொல்வீர்!’ என்றான்.

நெறி நூலில் வல்லவனங் கெழுந்து சொல்வான்;
"நேர்மையற்றார் எவர்தலையும் பல்ல வர்கள்
குறிதவறிப் போனதில்லை; கீழ்மேல் என்ற
குலம்எண்ணா தழகனிங்குச் செய்தசெய்கை
அறுதிஇட்டுக் கூறுகின்றேன்: கொடிய குற்றம்!
மனுவாதி அறநூல்கள் 'வேந்தன் செய்த
நெறிதவறி நின்றார்க்குக் கழுவே' என்று
நினைத்துரிய செய்வீர்" என்றான்.

ஒத்துக்கு மத்தளம்போல் ஆங்கி ருந்த
புரிநூலான் உரைத்திட்டான்: வெற்றி வேந்தே!
குத்துண்ட மாணவன்மன் பல்ல வர்கள்
கொடிவழியில் தொடர்புடையோன்: விலையே இல்லா
முத்துவிளை கடல்சூழும் இலங்கை நாட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/40&oldid=1253085" இலிருந்து மீள்விக்கப்பட்டது