பக்கம்:கொடி முல்லை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கொடிமுல்லை


'என் மகளின் சிலைசெதுக்க யார டாநீ?'
என்றிட்டான் மாமல்லன்; கோவைக் கண்ணன்!
‘என்னரசே! கண்ணுக்கு நாட்டில் உள்ள
எழிலெல்லாம் பொது என்றான் அழகன். 'சீச்சி!
குற்றம் குற்றமடா!' என்றான் வேந்தன்.
'ஒல்லுவதோ இப்பழி கற்சிலைய ழித்தால்
என்செய்யார் அதை உயிராய் ஓம்பும் தச்சர்?'
என்றிட்டான் கலையரசன் பதைப தைத்தே!

உம்புகழை வாதாவி இன்னும் சொல்லும்!

  • புலிகேசி உயிருண்ட உமது வாளின்

செம்மையைநீர் கறைசெய்து கொள்ள வன்றோ
நினைக்கின்றீர்? சீர்மிகுந்த அரசே! குற்றம்
நம்முடைய மாணவன்மன் செய்த தாலே
நடந்தகொடும் செயலிதுகாண்; கருணை செய்வீர்;
உம்புகழுக் கிதுநல்ல காட்டாம்!' என்றே
ஒளிஇழந்து நலம்பாடி வணங்கிச் சொன்னான்.

'குற்றமிவன் மேலில்லை என்று நானும்
கூறுகின்றேன், என்றமைச்சன் சொன்னான்; நூலைக்
கற்றுணர்ந்த அவைப்புலவர் பலரும் சேர்ந்து
'கலைஞனுக் கருள்புரிக! நாட்டில் என்றும்
சிற்றுளியால் செதுக்கிவைத்த சிலையே மக்கள்
வாழ்ந்தநிலை தெரிவிக்கும்; புகழை நாட்டும்.
மற்றவைகள் அழிந்தொழியும்; இதற்குக் காட்டு
மாமல்ல!* சிற்றன்னவாயில்' என்றார்.


  • புலிகேசி மாமல்லனின் தந்தையோடு போர்புரிந்த அரசனாவான். அவனை மீண்டும் மாமல்லன் வென்று அவன் கோநகரான வாதாவியைக் கைப்பற்றி அழித்து வெற்றித் தூண் நட்டான்,
  • மாமல்லனின் தந்தை மகேந்திரன்; தன் காலத்தில் புதுக்கோட்டைச் சீமையில் சிற்றன்னவாயில் என்ற ஊரில் சமணர் கோயில் ஒன்று செய்வித்தான். அது நல்ல வேலைப்பாடமைந்த குகைக் கோயில்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/42&oldid=1253087" இலிருந்து மீள்விக்கப்பட்டது