பக்கம்:கொடி முல்லை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

39


பதைபதைத்து மாமல்லன் எழுந்தி ருந்தான்;
படுகளத்து மறவன்போல் சிரித்தான்; 'என்னைக்
கதைகேட்டுக் கொண்டிருக்கும் பிள்ளை என்று
கருதிவிட்டீர் போலும் நீர்; இச்சை போல
எதையும் நான் செய்திடுவேன்; அழகன் மாலை
இறப்பதுவே தீர்ப்'பென்றான்! தாளம் சேர்த்துக்
குதிக்கின்ற தெருக்கூத்து முடிந்த பின்னர்
செல்கின்ற கும்பலைப்போல் அவையோர் சென்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/45&oldid=1253096" இலிருந்து மீள்விக்கப்பட்டது