பக்கம்:கொடி முல்லை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கொடிமுல்லை


தமிழ்க்கலைக்கு வாழ்த்துரைத்தா னமைச்சன்; வெள்ளித்
தவிசிருந்த புலவனெழுந் 'தென்றன் சொந்தத்
தமிழ்நாடும் கலைமொழியும் வாழ்க’ என்றான்;
தடந்தோளன் படைத்தலைவன், ‘கலையே எங்கள்
அமிழ்' தென்றான்; பொற்பதக்கம் கெட்டி முத்து
மணிமாலை பரிசாக அரசன் தந்தான்.
சிமிழ்க்காத அவையோரைக் குளிர்ந்து நோக்கிச்
சித்திரமே செல்வதைப்போல் வணங்கிச் சென்றாள்.

நாட்டுநிலை விளக்கிநின்றான் நுழைபு லத்தான்;
நடுவயலின் நிலைசொன்னார் உழவர் ; வெற்றி
நாட்டுகின்ற படைநிலையை வன்மன் சொன்னான்.
'நன்றி யென்றான் மாமல்லன். அங்குச் சூழ்ந்த
கூட்டத்தை விலக்கியொரு புலவன் வந்தான்;
கும்பிட்டான்; நறுக்கொன்றை எடுத்து நீட்டிப்
‘பாட்'டென்றான். 'பாடு'கென வேந்தன் சொல்லப்.
பலாமொய்க்கும் ஈப்போல அவையோர் சூழ்ந்தார்.

அவையோர்முன் புலவன் பாடிய பாட்டு

என்றும் பெயர்நிலைக்க
ஏதேனும் செய்திடுதல்
குன்றுநிகர் வேந்தர்க்(கு)
உரியது.காண்-நன்றே
தமிழ்நாட்டில் இல்லாத்
தனிப்பெருமை மூதூர்
இமைப்பொழுதில் ஆக்க எழு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/8&oldid=1244421" இலிருந்து மீள்விக்கப்பட்டது