பக்கம்:கொடு கல்தா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினால் பிரசார தந்திரத்தால் தங்கள் தங்கள் பக்கம் இழுக்க முயன்று, கட்சிகள் கண்டு, தங்களுக்குள்ளேயே வாதிட்டு - வஞ்சனைகள் செப்து, சமுதாயத்தைக் கெடுக்கிறார்கள். அவரவர் கொள்கைகளுக்கு ஏதாவது அழகான பெயரிட்டுக் கொள்வதில் குறைவில்லை. லட்சியங்கள், திட்டம், முற்போக்கு, மறுமலர்ச்சி என்று அடுக்குவதில் அளவில்லை. ஆனால் செயல் முறையிலே எல்லாம் மாறுபடுகின்றன. மனித சமுதாயத்துக்கு வழிகாட்டத் துணிகிறவர் களின் போக்கே தவறுகள் நிறைந்ததாக இருக்கும்போது தலைவர்கன் காட்டும்பாதை எப்படி நல்லதாக அமையும் ? சொல்லும் செயலும் மாறுபடுகிற சுயநலக்காரர்கள் நாட் டுக்கு நல்லது செய்ய முடியும்-செய்வார்கள்-என்று நம்பலாமா ? மனித சமுதாயம் உருப்பட வேண்டுமானால், மனி தன் ஒவ்வொருவனும் கல்வி அறிவுள்ளவனாக வேண்டும். ஒவ்வொருவனும் சிந்திக்கும் சக்தியை பண்படுத்தி வளர்க்க வேண்டும். தலைவர்களும் வழிகாட்டிகளும் அ த ற் கு ஆவன செய்ய வேண்டும் முதலில். மக்கள் தங்கள் நிலையை தாங்களே உணர்ந்து, சிந் தித்து, தங்களுக்குச் சரியெனப்படுவதை அறிந்து, சமுதா யக் கூட்டுறவில் எல்லோருக்கும் நல்லதான திட்டங்கள் காணவேண்டும், ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/10&oldid=1395308" இலிருந்து மீள்விக்கப்பட்டது