பக்கம்:கொடு கல்தா.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் அரங்கத்திலே பதவி மோகத்தையும், பதவி யைப் பாதுகாத்துக்கொள்வதற்காகச் செய்யப் படும் சூழ்ச்சியையும், போட்டி யை யும், மேலேறியவர்களைக் கவிழ்க்கச் செய்யும் சதிகளையும், வசைமாரிகளையுமே காண்கிறோம். பொதுவாக ஒவ்வொரு துறையிலும் அப்படித்தான். பணம் மிகுந்தவர்கள் செல்வாக்கு பெற்று விடுகிறார்கள், செல்வாக்கு மிக்கவர்கள் தங்களுக்குப் புகழ்பாடிக் தலை யாட்டுகிற பஜனைக் கூட்டத்தையே வளர்க்க விரும்புகிறார் கள். தங்களுக்கு மாறுபட்ட கருத்துடையவர்களைக் கீழே தள்ளி அஸ்தமனமாகும்படி செய்வதற்கு வேண்டிய வற்றை நிறைவேற்றத் தயங்குவதில்லை. திறமையிருந்தும் ஏழ்மையால் வாடுகிறவர்களை தங்களுக்குப் பக்க பலமாக விலைக்கு வாங்கிவிட முடிகிறது. இவர்களது திறமையும் உழைப்பும் முட்டாள் தனத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசவே பயன்படுத்தப்படுகிறது. நாட்டுமக்களின் நலத் திற்காக உபயோகமாவதில்லை. இன்றையப் பெரும்பாலான கட்சிகள், அறிஞர்கள், திறமையாளர்கள் எல்லோரும், உ ைழ ப்ப வர்களை ப் போலவே, வஞ்சகத்தால் சமுதாயத்தின் மேல்படியில் உள்ளவர்களது ஆக்கினைக்குக் கட்டுப்பட்டு உழைக்க வேண்டிய கூலிகளாகத்தான் திகழ்கிறார்கள். அவர்களது பொறுப்புக்குப் பெரிய பெரிய பெயர்கள் சூட்டப்பட் டிருக்கலாம். உண்மையில் அவர்கள் சுதந்திரமற்ற - பிறரது நலத்துக்குக் தங்கள் திறமையை, உ ைழ ப் ைப, காலத்தை அடகு வைத்துவிட்ட-கூலிகள்தான். அவர் களுக்கு தொழிலாளியைவிடக் கூலி அதிகம் கிடைக்க லாம். அவ்வளவுதான். மனித சமுதாயத்திலே உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/15&oldid=1395434" இலிருந்து மீள்விக்கப்பட்டது