பக்கம்:கொடு கல்தா.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

辩 – 17 — இன்பம் நுகர இதுவல்ல சமயம் ! நிலம் உழுது, அறுவடைகாண உழவர்க்கும் அமைதி யில்லையாம்! அத்தனை வேகமாய், கடுமையாய் உறுமிடு, முழங்கிடு நீ-முரசே ! களிப்புடன் முழங்குக சங்கே ! ஆர்த்திடு முரசே! அரற்றுக சங்கம்! தாமதம் வேண்டாம். ஆர்வக் கூவல் பெற்றிட நிற்கவும் வேண்டாம். கோழையர் தம்மை கவனிப்பதேனோ ? அழுவார், கெஞ்சுவார் எவரையும் மதித்திடல் வேண்டுமோ ? இளைஞரைக் கெஞ்சிடும் கிழவரை ஓரத்தில் ஒதுக்குக ! கவனிப்பதேனோ? மதலையர் தம் பிஞ்சுக் குரலோ அன்னையர் கெஞ்சும் ஒலியோ நின் செவியில் விழுந்திட வேண்டா ! வீர முரசே! ஆர்த்திடு, ஆர்த்திடு ! வெண்சங்கே வீறுடன் முழங்குக நீயே!” -வால்ட் விட்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/17&oldid=1395464" இலிருந்து மீள்விக்கப்பட்டது