பக்கம்:கொடு கல்தா.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 21 — இந்த விதமான மடத்தனங்களை வளர்க்கிற கல்வி முறையை மாற்றி யமைப்பது மட்டும் போதாது. மக்களை சிந்திக்கத் தூண்டுதல் அவசியம். அதற்கு நாட்டில் நலிந்துள்ள அறியாமை அந்தகாரத்தை அகற்றவேண்டும். அறிவொளி எங்கும் பரவ, எல்லோருக்கும் கல்வி கற்றுத்தர வசதிகள் செய்தாகவேண்டும். இன்று கல்வி யறிவற்ற வர்கள் மிகுந்த நாடு நம் தேசத்தைப் போல் வேறு எதுவு மில்லை. அறிவு பரவாததால், சிந்தனைவளர இடமில்லாததனால், எத்தர்கள் நன்றாக வாழமுடிகிறது. இங்கு எத்துவேலை களுக்கு கல்தாக்கொடுக்க வேண்டுமானால், மக்கள் சிந்திக் கும் திறமை, உடையவர்களாதல் அவசியம். மக்களின் அறியாமையை வளர்க்க விரும்புகிறவர் கள் மதத்தின் பெயரையும், கடவுளின் பெயரையும் நன்கு பயன்படுத்திக் கொள்கிறா.ர்கள். சுயநலமிகள் மதம், கடவுள், விதி என்று பூச்சாண்டி காட்டிக் காட்டி மற்ற வர்களை மடையர்களாக்கி வந்திருக்கிறார்கள். நரகம், மறு பிறப்பில் கொடுந்தண்டனை, கர்மம் என்று பயங்காட்டி தங்கள் காரியத்தைச் சாதித்து வந்திருக்கிறார்கள். சாதித்து வருகிறார்கள். பகுத்தறிவு இயக்கத்தினர் நாட்டிலே சிந்தனை உண் மைகளைப் பரப்பி, எத்தர்களின், சுயநலக்காரரின் குள்ள நரித்தனங்களை அம்பலப்படுத்த ஆரம்பித்ததிலிருந்து, தமிழ் நாடு விழிப்புறத் தொடங்கியிருக்கிறது. எனினும் மயக்கம் இன்னும் தீரவில்லை. நாட்டு, மக்கள் எல்லோரும் உண் மையை உணர முயல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/21&oldid=1395584" இலிருந்து மீள்விக்கப்பட்டது