பக்கம்:கொடு கல்தா.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 23 – உணவு உற்பத்தி பெருக வேண் டும் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று பேசியும் எழுதியும் வந்தும் பயனில்லை, பஞ்சநிலையே நீடிக்கிறது. இதனால் விவசாயத்தை மேற்கொண்டவர்களும், நிலமுடைய குட்டி முத லாளிகளும் முழுச் சோம்பேறிகளாகி வருகிறார்கள். பிற துறைகளில் உற்பத்திப் பெருக்கம் இல்லையென் றாலும், நாட்டிலே பிள்ளை உற்பத்தி அதிகரித்தே வருகிறது. மேல்நாடுகளிலே ஜனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத் துவதற்கு அவசியமான ஆலோசனைகள் பிரசாரம் செய்ய ப்படுகின்றன. பிள்ளை உற்பத்தியைக் குறைப்பது எவ் வளவு அத்தியாவசியமானது என்று அறிவுக்குப் பொருத் தமான காரணங்களோடு விளக்கி, மாற்றுகளும் காட்டப் படுகின்றன. நாட்டிலே உணவு உற்பத்தியும், தொழிற் பொருள் உற்பத்திகளும் வளர முடியாமல் போனாலும், இருப்பவற்றை வைத்து நிலைமையைச் சரிக்கட்டிக்கொள்ள இம்முறை நன்கு உதவுகிறது. - நம் நாட்டிலும் இம்முறை அனுஷ்டானத்துக்கு வர வேண்டும். அதற்குத் தேவையான பிரசாரங்கள் வளர வேண்டும். மதம், பாவ புண்ணியம் இவற்றின் பெயரால் எழுப்பப்படுகிற போலிச் சாக்குகளின் பொய்மையை எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு அறிவு விசாலமாதல் வேண்டும். நாட்டில் நிலவுகிற வறுமைக்கும், மனித சமுதாயத் தின் சீர்குலைவு, குணக்கேடுகளுக்கும் அளவுக்கதிகமான பிள்ளை உற்பத்தி முக்கியகாரணம். பிள்ளைகளைப் பெற்று விடுகிறார்கள். நல்ல முறையில் வளர்க்க முடிவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/23&oldid=1395586" இலிருந்து மீள்விக்கப்பட்டது