பக்கம்:கொடு கல்தா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலைமையை விமர்சித்த அறிஞர் ஒருவர் விளக்குவது இது : இந்நாட்டில் சரியான வளர்ச்சித் திட்டம் எதுவுமில்லாததனால், நாட்டுமக்களில் பெரும்பாலோர் எல்லையற்று விவ சாயத்தில் ஈடுபட சேர்ந்திருக்கிறது. விவசாயத்தையே நம்பி வாழ்கிறவர்கள். மொத்த ஜனத்தொகையில் அறு பத்தேழிலிருந்து எழுபது சதவிகிதம் வரை இருக்கிறார்கள். நாகரீக வளர்ச்சி பெற்றுவிட்ட இதர நாடுகளில், விவசா யத்தை நம்பிப்பிழைப்பவர்களின் தொகையைக் குறைத்து, வேறு லாபகரமான தொழில்களில் ஈடுபடச் செய்ததன் மூலமே முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். பல நாடுகளிலும் விவசாயம் மூலம் கி டை க் கு ம் வருஷ வருமானம் பற்றிய புள்ளி விவரம் இது. (பத்து வருஷங்களுக்கு முந்திய கணக்கு) கனடா ரூ. 1,038 அமெரிக்க ஐக்கிய நாடுகள் (U.S.A.) ரூ. 1,400 பிரிட்டன் ரூ. 980 இந்தியா ரூ. 65. விவசாய நிலை இவ்விதம் இருக்கும் போது நாட்டின ரில் பெரும்பாலோர் விவசாயத்தை நம்பி வானம் பார்த்து வாழ்வதால் என்ன பலன் ? சர்வகலாசாலையில் பட்டம் பெற்றவர்களின் கூட்ட த்திலே அறிஞர் ஒருவர் செய்த பிரசங்கத்தின் பகுதி இது மக்களின் சிந்தனைக்கும் தலைவர்களின் கவனத்துக் கும் சமர்ப்பிக்கப்பட வேண்டியதாகும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/34&oldid=1396065" இலிருந்து மீள்விக்கப்பட்டது