பக்கம்:கொடு கல்தா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வும் உள்ள கணக்கல்லாதஐயர், ஐயங்கார், பிள்ளை முதலிய வர்களில் எவராவது ஒருவர் தன் வீட்டுக் கலியாணத் துக்கு லக்கினம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தி யிருப்பாரா ? பெண்களின் தொந்தரவால் இவ்வித மான மூடபக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேர்ந்து விடுகிறதென சிலர் முறையிடுகிறார்கள், பெண் பிள்ளை களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், மூடத்தனமான - அறிவாளிகள் கண்டு நகைக்கும்படியான - செய்கைகள் செய்ய வேண்டு மென்று பெண்கள் வற்புறுத்து மிடத்தே அவருடைய சொற்படி நடப்பது முற்றும் தவறு.

உண்மையான காரணம் அதுவன்று. பெண்களின் மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள் எத்தனையோ செயல்களில் தம் பெண்களை, விலைக்கு வாங்கிய அடிமை கள் போலவும் விலங்குகள் போலவும் நடத்தி வருவது நாம் அறியாததன்று. எனவே, எண்ணில்லாத பொருள் நஷ்டமும், அறிஞரின் கையாடலும் இல்லாதவாறு துணிபாக உண்மையை உணர்த்து அதன்படி நடக்கவேண்டும்.' உ(பாரதியார்) மக்கள் உன்மையை உணர சிந்தனைப் பொன்னொளி எங்கும் பரவ வகைசெய்ய வேண்டும். நாகரிகம் என்ற பெயரிலே போலிக் கெளரவத்தை பூஜிக்கிற பண்புக்கு முடிவு கட்டினால் தான் நாடு உருப் படும். இந்தக்குணம் சோம்பேறித் தனத்தையே வளர்க் கிறது. எனது நண்பர் ஒருவர் சொன்னார். இப்பொழுது

எல்லோரும் சலவைச் சட்டை போட விரும்புகிறார்கள்.

ஆடைகள் வெளுப்பாக்க முனைகிறவர்கள் கு றை ந் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/40&oldid=1395998" இலிருந்து மீள்விக்கப்பட்டது