பக்கம்:கொடு கல்தா.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழையாமலே வாழ வெளிச்சம் போட்டு ஊரை ஏய்க்கும் பம்மாத்துக்காரர், ஏமாந்தோரை வஞ்சிக்க கடவுள், மதம், விதி, கர்மம் என்று கதையளக்கும் பெ ரு ச் சா ளிகள் போன்ற நாசகாரக் கும்பல்களும் மிகுந்து விட்டனர். ஊருக்கு நல்லது செய்வோம்; உழைப்பின் பலனை எமக்கு நல்கிடு என்று பேசி, அரசியல், சீர்திருத்தம், கட்சி என்று லேபிள் ஒட்டிக்கொண்டு எத்து வியாபாரம் செய் வோரும் ஊரை காட்டை, உலகத்தை, உயிர்க்குலத்தை கெடுத்து வருகிறார்கள். இத்தகையவர்கள் ம னி த குலக் கறையான்கள்: உயிர்க்குலத்தின் புல்லுருவிகள் உள்ளுக்குள்ளிருந்துஉடனிருந்தே-அரிக்கும்போது, சத்தை உறிஞ்சிக் கேடு செய்கிறபோது-மனிதவர்க்கம் உருப்படுவதேது ? மனிதரில் பெரும்பாலோர் இன்னும் வெறும் பிராணி கனாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்பதுவும் ஊர்வம்பு பேசுவதும், பிள்ளை உற்பத்தி செய்வதும், கவலை. களில் உழல்வதும்தான் வாழ்க்கை என்று தோன்றுகிறது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எண்ணற்றோர். படிக் கத் தெரிந்தவர்கள் எல்லோரும் சிந்திப்பவர்கள் அல்லர். மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன் என்று சொல்லப்பட்டாலும்; மனித வர்க்கத்தில் சிந்திக்கத் தெரிந்தவர்கள் குறைவு. சிந்திப்பவர்கள் மிகக் குறைவு. ச ரி யா | ன முறையில் சிந்தனை புரிபவர்கள் மிகமிகக் குறைவு. சுயநலமிகளும், புகழ் விரும்பிகளும், பதவிப் பித்தர் களும், பணத்தாசை கொண்டவர்களும் சிந்திக்கக் தெரியா தவர்களை-சரியாகச் சிந்திக்காதவர்களை-சொல் சாதுர்யத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/9&oldid=1395306" இலிருந்து மீள்விக்கப்பட்டது