பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 கொய்த மலர்கள் இவ்வாறு பிறர் காணப் பொது நோக்கு நோக்கும் காதலர் இருவர் எவ்வாறு தம் உள்ளக் கருத்தை ஒருவருக் கொருவர் காட்டிக் கொள்வர் என்பதையும் வள்ளுவர் நன்கு விளக்குகின்றார். இருவரும் ஒருவரை ஒருவர் தம்மைப் பிறர் காணாவிடத்துக் கண்டு கொள்வார்கள். அவர் தம் கண்கள் வாய்பேசாத எத்தனையோ கதைகளைப் பேசிக் கொள்ளுமாம். வாய்ச் சொற்களுக்கு அங்கே இடமே இல்லையாம். • கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' (1100) என்று வள்ளுவர் அவர் தம் கண்கள் பேசும் பேச்சுக்களை விளக்குகின்றனர். அவர் தம் காதலை அவர்கள் உணர்ந்து கொள்ளும் பார்வைக் குறிப்பை, ' யான்நோக்கும் காலை நிலம்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் ' (1094) எனத் தலைவன் வாக்காலேயே கூறுகின்றார். எனவே வள்ளுவர் காட்டும் காதல் வெறும் புறத் தோற்றத்தால் மட்டும் அமைவதன்று என்பதும், அது உள்ள நெகிழ்வே என்பதும், அந்த நெகிழ்வும் பண்டு தொட்டுப் பல்வேறு பிறவிகளில் பற்றி வந்ததே என்ப தும் நன்கு விளங்கும். இனி இவ்வாறு உள்ளத்தால் ஒன்றிய காதலர் கூடலையும் ஊடலையும் பிரிவையும் வள் ளுவர் எவ்வளவு நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து உலகுக்கு உணர்த்துகின்றார் என்பதைக் கண்டு அமை வோம். 'இன்பம் இன்ன வகைத்து' எனப் பிறருக்கு எடுத் காட்ட இயலாது என்பதனாலேயே அகப் பொருள் என அது பெயர்பெற்றது என்பர் அறிஞர். வள்ளுவர் அந்த இன்ப நிலையை நுணுகி நுணுகி உணர்ந்து உற்று அறிந்து ஓரளவு உணர்த்தவும் செய்கின்றார் என்றால், அவர் தடி