பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கைத்தறி ஆடைகள்

மேலை நாட்டு மக்களால் விரும்பப்ட்டு வாங்கப்பெற்ற தெனவும், பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்தத் தொழில் பழிதீர்த்த பான்மையால் நலிவுற்றதெனவும் கேள்விப்படுகிறோம். எனவே, மிகப் பழங்காலந் தொட்டு நேற்றுவரை மெல்லிய இழைகள் இழைத்துச் சிறந்த ஆடைகளை நம் நாட்டு மக்கள் நெய்தார்கள் என்பதை யாரே மறுக்கவல்லார்!

பல்வேறு சூழல்களுக்கு இடை யே கைத்தறித் தொழிலும் நாட்டில் ஓரளவு வாழ்ந்து வளர்ந்து வருகிறது, பல இலட்சக் கணக்கான மக்கள் இந்தத் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கமும் பல நெருக்கடியும் சூழலும் ஈர்க்க அவற்றின் இடையிலும் கைத்தறி வளர ஓரளவு உதவி செய்கின்றது. என்றாலும் இன்று செய்வதிலும் இன்னும் அதிகமாகச் செய்யலாம். அரசாங்கத்துக்கு மனம் இருக்கிறது; என்றாலும் சிலருடைய தயவையும் அது இன்னும் நாடவேண்டிய நிலையில் இருக்கின்ற காரணத்தால் அளவுக்கு மேல் கைத்தறிக்கு அதனால் உதவி செய்ய இயலவில்லை என்பது கண்கூடு.

இந்தியாவில் உழவுக்கு அடுத்தபடியாக - ஏன்? - உழவரோடு இயைந்ததாக அன்று தொட்டு வளர்ந்து வந்த ஒரே தொழில் இந்த நெசவுத் தொழிலேயாகும். மனிதனுக்கு உணவு இல்லாவிட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை- அந்தப் பட்டினி நிலையைப் பல நாள் வெளிக்காட்டிக் கொள்ளாது மூடிவைத்துவிடலாம். ஆனால் உடையின்றி வெளியே செல்ல முடியுமா? மானமாக வாழ முடியுமா? அதனால் தானே 'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்று தமிழர் சொல்லி வைத்தனர். எனவேதான், மக்களுக்குத் தேவையான உணவினை விளைக்கும் உழவுக்கும் மேலாக இவ்வுடையிணைச் செய்யும் தொழிலைப் போற்றி வந்தார்கள். அந்தக்