பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வடமொழி - ஆரியம் - சமஸ்கிருதம் 125 ஆசிரியர் இயற் சொல், திரி சொல், திசைச்சொல், வட சொல் என்று நால்வகைச் சொற்களைக் குறிக்கின்றார். இங்கே 'வட சொல்லுக்கு உரை கூற வந்தவர்கள் வட சொல் என்பது ஆரியச் சொற்போலும் சொல் என்றும், (இளம்பூரணர்) ஆரியச் சொல் (நக்கினார்க்கினியர்) என்றும் காட்டுவர். யாரும் 'சமஸ்கிருதம்' என்று குறிக்கவில்லை. மற்றும், உரையாசிரியர்கள் காலத்தில் ஆரியச் சொல்லும் வடசொல்லும் ஒன்றாகக் கருதப்பட்டன வென்பது தெளி வாயினும், இளம்பூரணர் வழி, வடசொல் ஆரியச்சொல் போன்ற தமிழ்ச் சொல்லையே குறிக்கும் எனக் கொள்ளல் வேண்டும். இனி இந்த எச்ச இயல் ஐந்தாம் சூத்திரம் வட சொல் பற்றியே வருவது. ' வடசொற் கிளவி வடவெழுத தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே ' என்பது அது. அதற்கு உரையாசிரியர்கள் பலவகையில் விளக்கம் தருகின்றனர். 'வடசொற் கிளவி' என்று. சொல்லப்படுவது ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஓரீஇ இரு திறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையவாகும் சொல் என்றவாறு' என்பர் இடம்பூரணர். நச்சினார்க்கினியரும் சேனாவரையரும் இதே பொருள் காட்டுவர். தெய்வச்சிலையார் வடமொழிச் (பிராகிருதம்) சொற்களையும் சேர்ப்பார். எனினும், அச்சொற்கள் வழங் கும் முறை கண்டு 'வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்கு உறுப்பாய் வாரா' எனச் சேனாவரையரும், திசைச் சொல்லும் வட சொல்லும் பெரும் பாலும் பெயர்ப் பெயராயும் சிறுபான்மைத் தொழிற் பெயராயும் வருத லின்றி ஏனைய வாரா' என நச்சினார்கினியரும் உரை கூறுவர். அனை வரும் இதற்குக் குங்குமம், நற்குணம், காரணம், காரியம் போன்ற சொற்களைக் காட்டுவர்.