பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மாணவர் நல்லவரே 14/ கட்டணத்துக்காகப் பெருங்கிளர்ச்சி செய்தார்கள் எனக் --கண்டோம், ஏன்? சென்ற மார்ச்சு ஏப்ரலில் (1958) நம் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகமாகிய அண்ணாமலையில் மாணவர் தேர்வுகள் நிறுத்தப்பட்டுப் பல்கலைக் கழகமே மூடப்பட்டது. இப்படி எத்தனையோ பல. இவற்றிற் கெல் லாம் காரணமென்ன? - இந்த நிகழ்ச்சிகளுக் கெல்லாம் அடிப்படை எங்கே உள்ளது? ஆளும் கட்சியினர் 'மாற்றுக் கட்சியினர் தூண்டு கோலினாலே தான் மாணவர் தம் உள்ளங்கள் கெடுகின்றன' என மேடைகளில் பேசுகின் றனர், மாற்றுக் கட்சியில் உள்ளவர்களோ அரசாங்கச் சட்ட முறைகள் ஒழுங்கற்ற வகையில் இருப்பது தான் இதற்கெல்லாம் காரணம் என்கின்றனர். எனினும் எல்லாக் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடிப் பேசி இதற்கு முடிவு காணவில்லை. சில மாதங்களுக்கு முன்னே சட்டசபையி லுள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் ஒன்று கூடி, இம்மாணவர் ஒழுங்கற்ற நிலைக்கு வழிகாணப் போவதாகத் திட்டம் வெளியிட்டனர். ஆனால் இது வில்லை . இன்று தமிழ் நாட்டின் ஆட்சி மன்றத்தில் நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் அங்கம் வகிக்கின்றனர். அவர்களெல்லாம் ஒன்று கூடின் இதற்கு ஒரு முடிவு காணமுடியாதா? முடியும்; பின் ஏன் செய்யவில்லை? ஒவ்வொரு அரசியல் கட்சியும் மாணவரை மம் தொழிலாளரையும் தத்தம் பக்கத்தில் இழுத்துக் கொள்ள விரும்புகிறது. எனவே, ஆளும் கட்சியாயினும் சரி. வேறு எக்கட்சியாயினும் சரி, இத்துறையில் இறங்க மயங்குகிறது. “எந்தக் கட்சியும் மாணவரிடைக் கலக்கக் தாது என்றால், ஆளும் கட்சியும் அதில் அடக்கம் தானே. ஆனால் அமைச்சர்களும், அவர் வழி இயங்கும்