பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கவிஞன் யார்? 149 வெறும் கல்லே. எனவே அது அறிந்தார் உள்ளத்தே கலையாக -நாயாக - நல்ல கலைப் பெட்டகமாகக் காட்சி தருகின்றது. அதைக் கல்லாகக் காண்பவர்கள் அந்தக் கலைவடிவான நாயைக் காண இயலாது. அல்லா தாருக்கோ அது கலைச் செல்வம். ஆம்! கலைஞனுக்குப் பொருந்தும் இந்த நிலையும் பண்பும் கவிஞனுக்கும் பொருந் துவனவே. அறிந்தறிந்து மகிழ்வாருக்கு அவன் கவிதை தெவிட்டாத தெள்ளமுதம். உள்ளத்தை உயர்த்தும் உயர் மருந்து - வாழ்வை வளமாக்கும் வற்றாத செல்வம். அல்லாதாருக்கு ஒரு வேளை அது வெறும் சொற்கட் டாகும். கவிதை அதைப் பாடுபவனுக்கும் மேலானது. கவிதை பாடும் புலவனின் தலைவனாகப் பணியாற்றும் நிலை உடை யது. கவிதை தான் உயர்ந்து தன் வழிப் பாடுபவனைப் பற்றி ஈர்த்து அவனை என்றும் வாழ்பவனாகச் செய்கிறது. கவிதை எல்லா வேறுபாடுகளையும் மறக்கச் செய்கிறது. இன்னார் இனியார் என்னாது. உற்றார் அற்றார் என்று பகுத்துப் பார்க்காத நல்ல நவிதை நாட்டில் எல்லார் உள்ளத்தும் இடம் பெறும். ஆங்கிலேயன் மேல் வெறுப் புற்று அவனை நாட்டை விட்டு ஓட்டக் கங்ஙனம் கட்டிச் செயலாற்றிய அந்த நாளிலும் இந்தியர் ஆங்கிலக் கவிஞர்களைப் போற்றிப் பாராட்ட வில்லையா! ஆம்! கவி தன்னைப் பாடியவனினும் மேம்பட்டதாகி, அறிவறிந்த உள்ளங்களைத் திறந்து, அவற்றுள் நிலைத்த இடம் பெற்றுச் சிறக்கிறது. மக்கள் உள்ளம் தொடும் கவிதை எதுவும் காலத்தேவன் கையில் சிக்காது வாழும் என்பது உறுதி. சங்க காலப் புலவர் தம் பாடல்களுள் பல அத்தகையனவே. சாகா வரம் பெற்ற கவிஞர்களின் தன்மை தனிச் சிறப்பு வாய்ந்தது. கவிஞனாவான் உயர்ந்த கற்பனைத் கொ . ம. 10