பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தமிழ் 155 திறனுக்கு ஏற்ற கற்பனை யைக் கொண்டதாய்ப் பார்ப்ப வரோ படிப்பவரோ எண்ணிப் பார்த்துப் போற்றும் வகையில் அமைவதாகும். நாடகம் சற்று உயர்வு நவிற்சி யாக இருக்கலாம். இன்றைக்கு நாம் படக்காட்சியிலோ அன்றி நாடகத்திலோ காணும் நிகழ்ச்சிகளை அப்படியே வாழ்வில் மேற்கொள்ள விரும்புவதில்லையே. அப்படி மேற் கொள்ள விரும்பினாலும், அது நகைப்புக்கு இடமாக அமைகின்றது. ஆனால், அதையே பலர் முன் நடித்துக் காட்டும் நாடக மேடைக் காட்சியாக்கினால் எல்லோரும் கண்டு மகிழ்கின்றோமல்லவோ! எனவே வாழ்வை விளக்கிக் காட்டுவது தான் நாடகம் என்றாலும் அதில் கற்பனையும் பிரவும் கலந்தால் தான் சிறப்பு உண்டாகின்றது. இந்த உண்மையைத்தான் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் காட்டியுள்ளார். இரண்டையும் பிணைத்து, ' நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலநெறி வழக்கம்' (அகத்திணை 36) எனக் காட்டியுள்ளார். இத் தொல்காட்பியனார் காலத் துக்கு முன்பிருந்தே நாடகம் தமிழ்நாட்டில் சிறந்திருக் தது என அறிகின்றோம். அதாவது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாடகம் தமிழ்நாட்டில் நன்கு வழக்கத்தில் இருந்தது எனக் காண முடிகின்றது. என்றாலும் அந்த நாடகங்களை இன்று நம்மால் காண முடியவில்லை; ஏன்? தமிழ்மொழி வரலாற்றில் எத்தனையோ மேடு பள்ளங்கள் உள்ளன. பிறநாட்டார் தம் சேர்க்கை, அரசியல், சமயப் போன்ற ஆதிக்கம் முதலியன தமிழ் காட்டு வாழ்க்கை முறையினை மாற்றி அமைத்துள்ளன. இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் ஆணை செலுத்திய பௌத்தம் சமணம் போன்ற சமயங்கள், இந்த நாடகம் இசை போன்றவை காம இச்சையை வளர்ப்பன என்றும், அவை கடியப்பட வேண்டியன என்றும் மக்களிடை ஒரு கருத்தைப் பரப்பின. அரசரும் அச்சமயங்களைச் சார்ந்து