பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்த மலர்கள்

________________

-16

அவர்கள் முன்னேறலாம்: இந்தக் கணக்கில் ஆலைகள் உற்பத்தியைப் பெருக்க, அதனோடு போட்டியிட நினைத்தோ ஏனோ கைத்தறியும் 1958ல் தனது அளவாகிய 15,000 லட்சம் கஜ எல்லையைத்தாண்டி 18.000 லட்சம் கஜம் செய்தது. அதனால் தான் வாணிபம் மந்தப்பட்டு நட்டமும் உண்டாக நேரிட்டது. நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு செய்யும் ஏற்றுமதியும் நூற்றுக்கு 138 ஆகும். ஆகவே உள் நாட்டுத் தேவையே பெநகா தபோது அளவுக்கு மீறி ஆடைகளை ஆலைகளும் கைத்தறிகளும் போட்டியிட்டுத் தயாரித்தால் வியாபாரம் மந்தமாகத் தானே போகும். மற்றும் வெளி நாட்டின் தேவை அறிந்து ஆடைகளைத் தயாரிக்கவும் முடியவிவ்லை. நம் நாட்டி லிருந்து ஆடைகளை -சிறப்பாகக் கைத்தறி ஆடைகளைப் பெருவாரியாக வாங்கும் நாடுகள் அமெரிக்காவும் மேற்கு ஜர்மனியுமேயாம்: அவற்றின் தேவைக்கு ஏற்ப ஆடை களைத் தயாரிப்பின் வியாபார மந்தம் நீங்கலாம். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட நிலை இதுவாக, மூன்றாவது ஐந்தாண்டு பற்றியும் இதற்குள் கணக்கிட்டு விட்டார்கள். ஆயினும் அது சரியென்றோ முடிந்த முடிபு என்றோ கொள்ள இயலாது. தனி மனிதனின் தேவை 20-3 கஜமாக ஆகலாம் எனக் கணக்கிடுகின்றார்கள் என்றாலும் 17-5 கஜத்துக்குமேல் செல்வது கடினமே. ஒருசாரர் கணக்குப்படி 20.3 கஜ வீதம் 96 000 லட்சம் கஜம் தேவையெனவும், ஆலைகள் 63,000 லட்சம் கஜமும், கைத்தறி 25 000 லட்சம் கஜம், விசைத்திறி 5000 லட்சம் கஜமும், அம்டர் 3000 லட்சம் கஜமம் நெய்யலாம் எனவும் கொள்ளலாம். எனினும் ஆய்ந்து பாப்பின் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் இந்தியாவில் சுமார் 43 கோடி மக்கள் வாழ்வார்கள் --என்றும், தனி ஒருவருக்கு 17:5 கஜம் துணி தேவை