பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி ஆடைகள் 21 என்று ' அநாகரிக' வெறி பிடித்தவர்களுக்கு உள்ளும் புற என்றாலும் கைத்தறி, நாகரிக மக்கள் வாழ்வுக்குத் தேவை யான பலப்பல வண்ண உடைகளைத் தயாரிக்கின்றது என்பரை இதோ உங்கள் முன் இருக்கும் கண்காட்சியின் மூலமே நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே இனி அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்க வேண்டும் என உறுதி கொள்ளுங்கள். அரசாங்கமும் இன்னும் எத்தனையோ வகையில் கள் உழைத்து அனுபவம் பெற்ற அறிஞர்கள் என்னென்ன செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். நானும் இங்கே சில சொல்லி என் உரையை முடித்துக் கொள்ளக் கருதுகிறேன். இதோ ஒரு சில நான் குறிப்பிட விரும்புவன; 1. ஆலைகளிலிருந்து இன்னும் குறைந்த விலைக்குத் தறிகளுக்கு நூல்கள கிடைக்குமாறு ஏற்பாடு செய்தல் வேண்டும். 2. இன்றைய 'பாவு' அமைக்கும் முறையில் மாற்றம் காண வழி தேட வேண்டும். பாவு தயார் செய்ய மனித நேரம் அதிகம் வீணாகின்றது. பலர் ஒரு பாவு அமைக்கத் தேவைப்படுகின்றனர். சில வேளைகளில் பலர் இரண்டு நாட்கள் கூட இருக்க வேண்டியுள்ளது. என வே அரசாங்கம் இதைக் குறைக்கும் வழியையும் ஆராய்ந்தோ தக்கவர்களை ஏற்படுத்தியோ, பரிசு கொடுக்க முன்வந்தோ புதுப்புது முறையில் 'பாவு' தயாரிக்க வழி காண வேண்டும். 3. நூல் நுழைகோல் (reed) அமைப்பு முறையில் கைத்தறி பெரும் மாற்றம் பெறும் வகையில் வழிகாண வேண்டும். கொ . ம. 2