பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

180 கொய்த மலர்கள் | நாட்டில் ஒரு குறையும் இருக்காது; இல்லாத காரணத்தால் தான் நாட்டில் கிளர்ச்சிகளும், உலகில் போர்களும், மக்கள், உள்ளத்தில் தடுமாற்றங்களும் உண்டாகின்றன. அத்தது மாற்றத்தைப் போக்க எல்லாருக்கும் எல்லாவற்றையும் சமமாகப் பகிர்ந்தளித்தலைத் தவிர வழி இல்லை. அதைத் தான் 'சமதர்மச் சமுதாயம்' என்கின்றனர் அரசியல் வாதிகள். கல்வியால் எல்லாரும் இன்புற்று வாழவேண்டும் என்ற -உணர்வு உண்டானால், நாட்டில் கற்றவர் பெருகி யாதொரு வேறுபாடும் இல்லாமல் பிறட்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றபடி இணைந்து வாழ்வார்க ளன்றோ? புகழும் மக்களுள் மாறுபாட்டை உண்டாக்குகின்றது. வாழ்வின் சுழல்களும் பிற இயல்புகளும் சிலரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டு செலுத்துகின்றன. சிலர் எத்தனையோ தகுதிகள் பெற்றிருந்தும் புகழ்பெறாது மாய் வதையும் காண்கின்றோம், • யாவ ராயினும் நால்வரைப் பின்னிடில் தேவர் என்பது தேரும் இவ்வையகம் ' -என்றபடி, யாராவது நான்குபேர் பின்னால் வர இருந்தால் அவர்கள் உடனே தலைவராகத் தம்மை நினைத்துக் கொள்ளுகின்றனர். இது அரசியலுக்கு மட்டும் பொருந் துவதன்று. கல்வி, கலை, பிற அனைத்துக்கும் பொருந்தும். அதனால் உண்மையிலேயே தகுதிபெற்றவர் வாடுவதோடு, மற்றவர் கண்டு பொறாமைப் படத்தக்க நிலையும் உண்டா கிறது. கற்றவர்ளுக்கிடையே இப்புகழால் உண்டாகும் பொறாமையல்லவா 'புலவர் காய்ச்சல்' என்ற ஒரு புதுமைப் பொதுத் தொடரையே உண்டாக்கி விட்டது. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு புலவர், இந்தப் புகழ் இகழ் இரண்டு மே- வேண்டாமென் --றும், ஆருயிர் முறைவழிப் படுவதால், சந்தர்ப்பமே ஒருவனை